துர்கா பவானி
ஆதியும் நீ! ஜோதியும் நீ! வானம் நீ! வையம் நீ! அவ்வையகம் வெளியிடும் காற்றும் நீ! நீரும் நீ! இவையாவும் இயங்க சக்தியும் நீ! வாழ்வின் ஆதார சத்தியம் நீ! வாழ்வினை காக்கும் நீதியும் நீ! பிள்ளைக்கு அன்னை நீ! அன்னைக்குப் பிள்ளையும் நீ! சர்வ காலமும் ஜகத்தை ரட்சிக்கும் நீ! நவ பொழுதேனும் கொலுவாய் வீற்றுப்பாய் நீ! ஓய்வு பெறுவாய் நீ! தியான நிலை அடைவாய் நீ! வேள்வி காப்பாய் நீ! நடக்கும் நன்மை - தீமை காண்பாய் நீ! மௌனம் கலைப்பாய் நீ! மனிதாசுரனை வதம் செய்வாய் நீ! சாந்தி பெறுவாய் நீ! ஆனந்தம் கொள்வாய் நீ! வாழிய! வாழிய! நீ!!