எது புதுவருடம் !
- Get link
- X
- Other Apps
ஓர் ஆண்டை கணக்கிடும்
அறுபத்து கலை நான்கும் கற்றுப்பார்
குழப்பம் ஏதும் வேண்டாம்
சித்திரை திங்களே தொழிலை(உழவு) தொடங்கிப்பார்
நிலம் உழுவ உரம் தெளிக்க மண் செழிக்கும்
கோடையில்; வற்றிய ஓடையில் வற்றாது உழைதுப்பார்
விதை விதைக்க நீர்பெருகும்
பதினெட்டாம் ஆடியில்; படையல் வைத்து வணங்கிப்பார்
குறுவையும் சம்பாவும்
நெற்றியின் வியர்வை துளியில் விளையுது பார்
திங்களின் முதல் நாளாம்
தையில் நெல்மணிகள் அறுவடை ஆகுது பார்
எள்ளையும் கொள்ளையும்
தெளித்து மண்ணை சீர் செய்துப்பார்
முழு ஆண்டும்
நில்லாமல் ஒடுங்கால் நின்று கலைத்துப்பார்
வாடிய பயிரையும்
கண்டு வாடிய கூட்டத்தையும் பார்
அரை ஆடிற்குள்ளையும்
ஒரு முறை இடைவேளை விடும் கலாசாரத்தையும் பார்
கால் வைத்து மிதித்தாலும்
வேண்டும் வரம்தருவாள் விதையொன்றை ஊன்றிப்பார்
காவிரி தென்பெண்ணை பாலாரும்
வற்றா நீரோடும் தென் தமிழகம் வந்துப்பார்

Comments
Post a Comment