முதல் நாள்!

உன்னிடம் காதல் சொல்லிட நானும் வந்தேன்

நீ பார்வை ஒன்றை மட்டும் தந்தாய்
அதை அங்கு உணர்திடவே நான்;
அன்றே புது கவிஞனும் ஆனேன்!
உன் கால் கொலுசுமணி சத்தம் முதல்
கார்மேக கூந்தலின் நுனி இதுவரை
நான் கண்டது ஒரு பென்னை
இனி இங்கு நான் காண்பது;
பிரமன் சிந்திய கற்பனை துளியை!
கண்களை மீனென்று கூற முடியவில்லை
யாரேனும் உண்டுவிடுவார்களோ என்று அஞ்சி;
என்ன செய்ய சைவமாக பிறந்துவிட்டேனடி!
நானும் உன் கை கோர்த்து நடந்திட
இதுவரை பார்த்து படித்ததேதும்
ஞாபகம் இல்லாமல் போயினும்
நியூட்டன் விதியின் உவமை கதை சொல்லும்
உண்மை மட்டும் நெஞ்சில் நிற்க;
இன்ன்றைக்கு இது போதும் என்று
நீயும் விலக; விட்டு விலக மனமில்லாமல்
நானும் தவிக்க; இதுவல்லவோ காதல் என்று
நீயும் எண்ணி நகைக்க; இதுதானே காதல் என்று
நானும் சொல்லி வருந்திட;
முதல் நாள் காதல் முற்றிட்டு!

Comments

Popular posts from this blog

You know what to do..

எது புதுவருடம் !

பொற்பாதம் சரணடைந்தேன்