இனிது இனிது
குழல் இனிது, யாழ் இனிது
காலை எழுப்பும் அன்னை திட்டும் இனிது
மின்சார ரயிலின் சத்தம் இனிது
அதில் பிச்சை கேக்கும் போது வரும் சில்லறையின் ஒலியும் இனிது
இறங்கி பேருந்தை அடையும் வேளையில் பிள்ளையின் அழுகுரலும் இனிது
போக்குவரத்து நெரிசலில் கேக்கும் ஒலிபெருக்கியும் இனிது
செரி, புதிதாக வாங்கியே கைபேசியின் அழைப்பு மணியும் இனிது
அதையே தொடர்ந்து வானொலியின் பாடல்களும் இனிது
இன்றிரவு என்ன பன்லாம் என திட்டமிடும் தோழர்களின் செயலும் இனிது
குறுந்தகவலில் அழைக்கும் தோழியின் தோரணையும் இனிது
பணி முடித்தபின் பருகும் தேனிரும் இனிது
வீடு திரும்பும் வேலை, சாலை யோரம் பூக்கும் பூக்கள் இனிது
காற்று வாங்க சென்ற கடற்கரை இனிது
அலையின் வேகத்தில் வரும் ஓசையும் இனிது
குழல், யாழ் மட்டும் இல்லை நான் கூறும் தமிழ் கூட இனிது தான்
Comments
Post a Comment